தமிழ்நாடு

ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களை பணி நியமனம் செய்ய வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

Published On 2023-05-13 06:54 GMT   |   Update On 2023-05-13 06:54 GMT
  • காலவரையற்ற சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தினை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
  • தேர்தல் வாக்குறுதிப்படி அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் முதலமைச்சருக்கு உண்டு.

சென்னை:

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போட்டித் தேர்வின்றி பணி நியமனம் செய்யப்பட வேண்டுமென்றும், வயது உச்சவரம்பை 57-ஆக உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தி காலவரையற்ற சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தினை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இது மிகுந்த கவலை அளிக்கும் விஷயமாகும்.

அண்மையில், "கவர்னர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு, காதுகள் இல்லை" என்று கூறியவர் முதலமைச்சர். இன்று இந்த முறையை ஆசிரியர்கள் விஷயத்தில் முதலமைச்சரே கடைபிடிப்பது வேதனை அளிக்கிறது.

தேர்தல் வாக்குறுதிப்படி அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் முதலமைச்சருக்கு உண்டு. எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களை அழைத்துப் பேசி அவர்களுடைய கோரிக்கையினை உடனடியாக நிறைவேற்ற முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News