தமிழ்நாடு

116 அடியாக சரிந்த நீர்மட்டம்- முல்லைபெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து அடியோடு நின்றது

Published On 2023-04-19 06:12 GMT   |   Update On 2023-04-19 06:12 GMT
  • கோடை காலம் தொடங்கியது முதல் அணைக்கு நீர்வரத்து சரிந்ததால் நீர்மட்டம் குறைந்துகொண்டே வந்தது.
  • இன்று காலை அணைக்கு தண்ணீர் வரத்து அடியோடு நின்றுவிட்டது. 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

கூடலூர்:

கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணைமூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் மதுரை, தேனி மாவட்ட குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

கோடைகாலம் தொடங்கியது முதல் அணைக்கு நீர்வரத்து சரிந்ததால் நீர்மட்டம் குறைந்துகொண்டே வந்தது. இன்று காலை அணைக்கு தண்ணீர் வரத்து அடியோடு நின்றுவிட்டது. 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 116 அடியாக உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 54.17 அடியாக உள்ளது. 49 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.60 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 60.35 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

Tags:    

Similar News