தமிழ்நாடு

எதிர்க்கட்சி தலைவர் போல் கவர்னர் செயல்படுகிறார்- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published On 2023-10-30 07:16 GMT   |   Update On 2023-10-30 07:16 GMT
  • தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மனுக்களை கவர்னர் நிராகரிக்கிறார்.
  • காவேரி ஒழுங்குகாற்று குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.

வேலூர்:

வேலூர் மாநகராட்சி காட்பாடி கழிஞ்சூர் ஏரி மற்றும் தாராபடவேடு ஏரி ரூ.26 கோடி மதிப்பில் புரணமைத்து சுற்றுலாத்தலமாக மாற்றம் பணி நடைபெற்று வருகிறது.

பணிகளை அமைச்சர் துரைமுருகன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் பணிகளின் விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மனுக்களை கவர்னர் நிராகரிக்கிறார். நானும் எத்தனையோ கவர்னர்களை பார்த்து விட்டேன்.

இவரை போல் யாரையும் பார்த்தது இல்லை. எதிர்க்கட்சி தலைவர் போல் செயல்படுகிறார்.

தமிழகத்தில் நீர் நிலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொய்வு இன்றி நடைபெற்று வருகிறது. காவேரி ஒழுங்குகாற்று குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.

அந்த கூட்டத்தில் எங்கள் நிலைப்பாட்டை தெரிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

450 பா.ஜ.கவினர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும் தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பா.ஜ.க. விசாரணை குழுவினர் தெரிவித்தாக கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர்களிடம் அதிகாரம் உள்ளது என துரைமுருகன் தெரிவித்தார்.

Tags:    

Similar News