தமிழ்நாடு செய்திகள்

கோப்புபடம். 

நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் ரத்து

Published On 2023-11-17 11:50 IST   |   Update On 2023-11-17 11:50:00 IST
  • ரெயில் எண்.12688 சண்டிகர்-மதுரை எக்ஸ்பிரஸ் ஜனவரி 15, 19, 22, 26, 29 மற்றும் பிப்ரவரி 2, 5 ஆகிய தேதிகளில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.
  • மதுரை மார்க்கத்தில் ரெயில் எண்.16788 ஸ்ரீமத் வைஷ்ணவ் தேவி கத்ரா எக்ஸ்பிரஸ்-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ஜனவரி 11, 18, 25 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை:

வடக்கு ரெயில்வேயில் ஆக்ரா பிரிவின் மதுரா-பல்வால் பிரிவில் யார்டு மறுவடிவமைப்பு பணியை முடிப்பதற்காக மதுரா சந்திப்பில் இன்டர்லாக் செய்யப்படாத பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதனால் மதுரையில் இருந்து இந்தியாவின் பிற பகுதிகளுக்கு இயக்கப்படும் பல ரெயில்கள் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ரத்து செய்யப்படுகின்றன. ரெயில் எண்.12641 கன்னியாகுமரி-டெல்லி நிஜாமுதின் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ஜனவரி 10, 12, 17, 19, 24, 26, 31 மற்றும் பிப்ரவரி 2 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரெயில் எண்.12642 டெல்லி நிஜாமுதின்-கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ் ஜனவரி 13, 15, 20, 22, 27, 29 மற்றும் பிப்ரவரி 3, 5 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. ரெயில் எண்.12651 மதுரை-டெல்லி நிஜாமுதின் எக்ஸ்பிரஸ் ஜனவரி 14, 16, 21, 23, 28, 30 மற்றும் பிப்ரவரி 4 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேபோல ரெயில் எண்.12652 மதுரை-டெல்லி நிஜாமுதின்-மதுரை எக்ஸ்பிரஸ் ஜனவரி 16, 18, 23, 25, 30 மற்றும் பிப்ரவரி 1, 6 ஆகிய தேதிகளில் ரத்தாகிறது.

ரெயில் எண்.12687 மதுரை-சண்டிகர் எக்ஸ்பிரஸ் ஜனவரி 10, 14, 17, 21, 24, 28 மற்றும் 31-ந்தேதியில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. ரெயில் எண்.12688 சண்டிகர்-மதுரை எக்ஸ்பிரஸ் ஜனவரி 15, 19, 22, 26, 29 மற்றும் பிப்ரவரி 2, 5 ஆகிய தேதிகளில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல ரெயில் எண்.16787 திருநெல்வேலி-ஸ்ரீமத் வைஷ்ணவ் தேவி கத்ரா எக்ஸ்பிரஸ் ஜனவரி 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் ரத்தாகிறது. மதுரை மார்க்கத்தில் ரெயில் எண்.16788 ஸ்ரீமத் வைஷ்ணவ் தேவி கத்ரா எக்ஸ்பிரஸ்-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ஜனவரி 11, 18, 25 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News