தமிழ்நாடு

கோப்பு படம்

திருப்பூர் பின்னலாடை உள்நாட்டு வர்த்தகம்-ஏற்றுமதி ரூ.70ஆயிரம் கோடியை தாண்டியது: சங்க தலைவர் தகவல்

Published On 2022-08-14 04:27 GMT   |   Update On 2022-08-14 04:27 GMT
  • பின்னலாடை துறைக்கு மாற்றங்கள் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
  • பின்னலாடை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி ரூ.5ஆயிரம் கோடியாக இருந்தது.

திருப்பூர்:

திருப்பூர் - காங்கயம் ரோடு, டாப்லைட் வளாகத்தில் பின்னலாடை எந்திர கண்காட்சி நடந்து வருகிறது. இதில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

பின்னலாடை துறைக்கு மாற்றங்கள் இருந்து கொண்டே இருக்க வேண்டும். பின்னலாடை தொழில் நூல் விலை உள்ளிட்ட பல கட்ட சோதனைகளை சந்தித்திருந்தாலும் அதை சாதனைகளாக ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். நவீனத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். மற்ற நகரங்களில் இது போன்ற சவால்களை சந்திக்கமாட்டார்கள்.

20 ஆண்டுகளுக்கு முன்பு பின்னலாடை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி ரூ.5ஆயிரம் கோடியாக இருந்தது. ஆனால் இன்று ரூ.70ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது. சிரமம் என்று முடங்கி இருந்தால் இது போன்ற நிகழ்ச்சி நடைபெறாது.

ஒவ்வொருவரின் தொடர் முயற்சி இருந்து கொண்டே தான் இருக்கும். அடுத்து பின்னலாடை ஏற்றுமதி ஒரு லட்சம் கோடியை விரைவில் தாண்டும். அழிவே இல்லாத துறை இது. பின்னலாடை தயாரிப்பில் இந்திய அளவில் திருப்பூர் 60 சதவீதத்தை கடந்துள்ளது. நிரந்தர கண்காட்சி வளாகம் அமைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளாக பல சோதனைகள் ஏற்பட்டன. இதனால் எங்களை நிலை நிறுத்தவே பல போராட்டங்களை சந்திக்க வேண்டியதாகி விட்டது. வரும் காலங்களில் கோவை கொடிசியாவில் உள்ளது போல் திருப்பூரிலும் ஒரு வளாகம் உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படும். ஏற்றுமதியை அதிகமாக உருவாக்கி தரும் நகரங்களில் காஞ்சிபுரம் , சென்னைக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் திருப்பூர் இருக்கிறது. இன்னும் 2 ஆண்டுகளில் காஞ்சிபுரத்தை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு திருப்பூர் வந்து விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News