தமிழ்நாடு

இரட்டை தலையுடன் பிறந்த கன்று குட்டி: ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்லும் கிராம மக்கள்

Published On 2023-09-23 09:15 GMT   |   Update On 2023-09-23 09:15 GMT
  • பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று அதிசய கன்று குட்டியை பார்ப்பதோடு செல்பி எடுத்தும் செல்கின்றனர்.
  • கடவுளின் ஆசிர்வாததத்தால் கோமாதா பிறந்து இருப்பதாகவே கிராம மக்கள் நினைக்கிறார்கள்.

அரூர்:

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரவீந்தர். விவசாயி. இவரது பண்ணையில் 2 கறவை மாடுகளை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் அவர் வளர்க்கும் பசுமாட்டில் ஒன்று ஆண் கன்று ஒன்றை ஈன்றது.

அது சாதாரண கன்று குட்டி போல் இல்லாமல் இரண்டு தலைகளுடன் பிறந்தது. இந்த கன்று குட்டி இரண்டு வாய், இரண்டு மூக்கு, நான்கு கண்களுடன் பிறந்துள்ளது.

இந்த தகவல் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தெரியவர காட்டு தீ போல் பரவியது.

இதனையடுத்து பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று அதிசய கன்று குட்டியை பார்ப்பதோடு செல்பி எடுத்தும் செல்கின்றனர்.

கடவுளின் ஆசிர்வாததத்தால் கோமாதா பிறந்து இருப்பதாகவே அந்த கிராம மக்கள் நினைக்கிறார்கள்.

மேலும் இந்த பசுவின் உரிமையாளர் பசு மாட்டையும், ஈன்ற அதன் கன்று குட்டியையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.

Tags:    

Similar News