தமிழ்நாடு

திண்டுக்கல்லில் விளைந்த 3 அடி உயர வெள்ளரிக்காய்.

திண்டுக்கல்லில் விளைந்த 3 அடி நீள அதிசய வெள்ளரி

Published On 2023-05-18 03:39 GMT   |   Update On 2023-05-18 03:39 GMT
  • காய்கறி, பழங்களின் கழிவுகள், மரங்களில் இருந்து விழும் இலைகள், மாட்டுச்சாணம் ஆகியவற்றைக் கொண்டு இயற்கை உரம் தயாரித்து வருகிறார்.
  • கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெங்களூர் சென்ற ஷர்மிளா அங்கிருந்து ஹைபிரிட் வகை வெள்ளரி விதையை வாங்கி வந்து தனது வீட்டில் நட்டு வைத்தார்.

திண்டுக்கல்:

திண்டுக்கல்-தாடிக்கொம்பு ரோடு கருப்பணசாமி கோவில் அருகே வசித்து வருபவர் ஷர்மிளா தினேஷ். இவர் அழகுகலை, பரிசு பொருட்கள் கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் காய்கறித் தோட்டம், பூந்தோட்டம் வளர்ப்பதிலும் ஆர்வம் கொண்டவர். பல்வேறு வகை காய்கறிகளை ஆர்கானிக் முறையில் வளர்த்து வருகிறார். அன்றாடம் வீட்டு தேவைகளுக்கு பயன்படுத்தக்கூடிய கத்தரி, தக்காளி, மிளகாய், வெண்டை, கருவேப்பிலை, கொத்தமல்லி, எலுமிச்சை உள்ளிட்ட காய்கறிகளை தோட்டத்தில் இருந்து பறித்து பயன்படுத்தி வருகிறார்.

மேலும் காய்கறி, பழங்களின் கழிவுகள், மரங்களில் இருந்து விழும் இலைகள், மாட்டுச்சாணம் ஆகியவற்றைக் கொண்டு இயற்கை உரம் தயாரித்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெங்களூர் சென்ற ஷர்மிளா அங்கிருந்து ஹைபிரிட் வகை வெள்ளரி விதையை வாங்கி வந்து தனது வீட்டில் நட்டு வைத்தார்.

பொதுவாக வெள்ளரிக்காய் அரை அடி வரை மட்டுமே வளரும் தன்மை கொண்டது. ஆனால் இவர் வளர்த்த வெள்ளரிச்செடி 33 இன்ச் (2.45 அடி) வரை வளர்ந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் தனது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் தெரிவித்தார்.

இதனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். அவ்வாறு வரும் பொதுமக்களிடம் வீடுகளிலேயே காய்கறித் தோட்டம் அமைத்து பயன்பெறுமாறும், இயற்கை உரத்தை தயாரித்து அதில் இடுமாறும் அறிவுறை கூறி வருகிறார். இந்த அரிய வகை வெள்ளரி மேலும் நீண்டு புடலங்காய் போல வளர்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News