தமிழ்நாடு செய்திகள்

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு சார்பில் 25-ந்தேதி ஆர்ப்பாட்டம்- முத்தரசன் பேட்டி

Published On 2023-07-23 15:28 IST   |   Update On 2023-07-23 15:28:00 IST
  • மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தது.
  • மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாகும்.

சென்னை:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தது. இதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு சார்பாக வருகிற 25-ந்தேதி தமிழகம் முழுவதும் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது. விழுப்புரத்தில் நடைபெறும் போராட்டத்தில் நான் பங்கேற்கிறேன். மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News