தமிழ்நாடு செய்திகள்
சிறுவாபுரி சிவன் கோவிலில் உழவாரப்பணி
- சிறுவாபுரி சிவன் கோவிலில் 6 வாரங்கள் வந்து வணங்கினால் வாழ்வில் ஆனந்தம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
- சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கோவில் பிராகாரத்தில் இருந்த செடி, கொடிகளை அகற்றி உழவாரப்பணி செய்தனர்.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள சிறுவாபுரி கிராமத்தில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மிகவும் பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோவிலில் 6 வாரங்கள் வந்து வணங்கினால் வாழ்வில் ஆனந்தம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பழமைவாய்ந்த இந்த கோயிலுக்கு 2012-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
இந்த நிலையில் கோவில் நிர்வாகம் மற்றும் சென்னை இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி சங்கம் ஆகியவை இணைந்து சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கோவில் பிராகாரத்தில் இருந்த செடி, கொடிகளை அகற்றி உழவாரப்பணி செய்தனர். இதில், கோவில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார், சின்னம்பேடு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சேகர், வடக்குநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அரிதாஸ், பி.சந்தானம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.