தமிழ்நாடு செய்திகள்
பூண்டி ஏரியில் தண்ணீர் திறப்பு 6 ஆயிரம் கனஅடியாக குறைப்பு
- பூண்டி ஏரிக்கு வரும் நீர்வரத்து 5,900 கனஅடியாக குறைந்தது.
- பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கனஅடி இதில் 2,839 மி.கன அடி தண்ணீர் உள்ளது.
சென்னை:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. தொடர் மழையின் காரணமாக ஏரிக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியை தாண்டியது. இதையடுத்து நேற்று பூண்டி ஏரியில் இருந்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இந்த நிலையில் இன்று ஏரிக்கு வரும் நீர்வரத்து 5,900 கனஅடியாக குறைந்தது. இதனால் உபரி நீர் திறப்பு 6 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கனஅடி இதில் 2,839 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரியின் மொத்த உயரமான 35 அடியில் 34 அடிக்கு தண்ணீர் நிரம்பி இருக்கிறது.