தமிழ்நாடு

தேர்வில் கலந்துகொண்ட இளைஞர்கள்

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்துத்தேர்வு: தீவிர கண்காணிப்புடன் 15 ஆயிரம் பேர் எழுதினர்

Update: 2022-06-25 07:09 GMT
  • பட்டப்படிப்பு முடித்த பட்டதாரிகள் ஆண்கள், பெண்கள் சுமார் 2.21 லட்சம் பேர் சப்-இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கு விண்ணப்பித்தனர்.
  • போலீஸ் துறையில் ஏற்கனவே பணியாற்றி வருபவர்களும் உள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வுக்காக இந்த தேர்வை எழுதினர்.

மதுரை:

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 444 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பாணை வெளியிட்டது. இதையடுத்து பட்டப்படிப்பு முடித்த பட்டதாரிகள் ஆண்கள், பெண்கள் சுமார் 2.21 லட்சம் பேர் சப்-இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கு விண்ணப்பித்தனர்.

இவர்களுக்கு முறைப்படி ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு இன்றும் (சனிக்கிழமை), நாளையும் எழுத்து தேர்வு நடைபெறுகிறது. முதல் நாளான இன்று மதுரையில் சேதுபதி மேல்நிலைப்பள்ளி, கேப்ரன்ஹால்,ஓ.சி.பி.எம் பள்ளிகள் உள்ளிட்ட 20 மையங்களில் 15 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதினர்.

பொது அறிவு மற்றும் தமிழ் திறனறிதல் என்ற வகையில் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதற்காக இன்று காலை 7 மணி முதலே தேர்வு மையங்களின் முன்பகுதியில் ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசையில் திரண்டனர். அவர்களை போலீசார் தீவிர சோதனைக்கு பிறகு தேர்வு மையங்களுக்கு அனுமதித்தனர். அனுமதி சீட்டு மற்றும் அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டு விண்ணப்பதாரர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். கால்குலேட்டர்கள் மற்றும் செல்போன் உள்ளிட்ட விதமான பொருட்களும் அனுமதிக்கப்படவில்லை.

மேலும் போலீஸ் துறையில் ஏற்கனவே பணியாற்றி வருபவர்களும் உள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வுக்காக இந்த தேர்வை எழுதினர். நாளையும் எழுத்துத்தேர்வு நடக்கிறது. சப்-இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கான எழுத்து தேர்வைக்காக விண்ணப்பதாரர்கள் தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. தேர்வு மையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்

Tags:    

Similar News