இடியாப்பத்தால் குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்... கணவருக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்
- உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் திருமணம் முடிந்த காலத்தில் இருந்தே தான் துன்பங்களை அனுபவித்து வருவதாக வனிதா கூறினார்.
- தனக்கு வீட்டில் உணவு சமைத்து தருவது கிடையாது. இதனால் அடிக்கடி வெளியே சாப்பிட்டதாக வேணு கூறினார்.
சென்னை:
இடியாப்பத்தால் இடியாப்ப சிக்கலுக்குள் சிக்கியவர் பற்றிய விபரம் வருமாறு:-
வேணுகுமார் என்பவரது மனைவி வனிதா. இவர்கள் இருவருக்கும் இது 2-ம் திருமணம். கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. வேணுகுமார் குடிப்பழக்கம் கொண்டவர் என்று கூறப்படுகிறது.
ஒருநாள் மனைவி வனிதாவிடம் இடியாப்பம் செய்து தரும்படி கேட்டுள்ளார். ஆனால் வீட்டில் இடியாப்ப குழல் இல்லை. எனவே இடியாப்பம் செய்ய முடியாது என்று மனைவி கூறியிருக்கிறார். இதனால் கோபம் அடைந்த வேணுகுமார் மனைவியை அடித்துள்ளார்.
இதுபற்றி வனிதா போலீசில் புகார் செய்தார். இந்த வழக்கு சைதாப்பேட்டை கோர்ட்டில் நடந்து வந்தது.
வழக்கு விசாரணையின்போது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் திருமணம் முடிந்த காலத்தில் இருந்தே தான் துன்பங்களை அனுபவித்து வருவதாக வனிதா கூறினார்.
வீட்டில் தொடர்ந்து பிரச்சனையை உருவாக்கியதால் மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சிகள் பலனளிக்கவில்லை. கடந்த 2018-ல் தான் ஆசையாய் அவரது பிறந்தநாளுக்கு 'காப்பி கப்' வாங்கி கொடுத்ததை சிகரெட் சாம்பல் கொட்டும் குவளையாக பயன்படுத்தி எனது உணர்வுகளை புண்படுத்தினார் என்றும் கோர்ட்டில் கூறினார்.
மேலும் கணவரது குடும்பத்தினர் திருமணத்துக்கு பிறகு வேலைக்கு செல்வதை விரும்பாததால் வேலையை விட்டுவிட்டதாகவும் தினசரி வீட்டு செலவுக்கே தனது தந்தையிடம் பணம் பெற வேண்டியது இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
ஆனால் மனைவியின் குற்றச்சாட்டை வேணு மறுத்தார். தனக்கு வீட்டில் உணவு சமைத்து தருவது கிடையாது. இதனால் அடிக்கடி வெளியே சாப்பிட்டதாக கூறினார். மேலும் அடிக்கடி தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியதாகவும் கூறினார். தொடர்ந்து பிரச்சதனக்கு வீட்டில் உணவு சமைத்து தருவது கிடையாது. இதனால் அடிக்கடி வெளியே சாப்பிட்டதாக கூறினார்.னை ஏற்பட்டதால் நிபுணர்களின் கவுன்சிலிங்குக்காக பலமுறை அழைத்தும் மறுத்து விட்டார். இப்போது இந்த வழக்கை தனது சொத்துக்களை அபகரிக்க போட்டிருப்பதாக கோர்ட்டில் தெரிவித்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதற்காக கடன் மீட்பு தீர்ப்பாயத்தின் நடவடிக்கையை வேணு எதிர்கொண்டது தொடர்பான ஆவணம் தாக்கல் செய்யப்பட்டது. அதை பரிசீலித்த நீதிபதி அனிதா ஆனந்த் 'எதிர்மனு தாரரான வேணுவிடம் எதுவும் இல்லாத நிலையில் மனுதாரர் சொத்துக்களை எப்படி அபகரிக்க முடியும்? எதிர்மனுதாரர் தனது பொருளாதார நிலைமையை மறைத்து ஒரு பெண்ணை திருமணம் செய்து உணர்வு ரீதியாக துன்புறுத்தி குடும்ப வன்முறைக்கு ஆளாக்கியது தெளிவாகிறது என்று குறிப்பிட்ட நீதிபதி, வனிதாவுக்கு இழப்பீடாக ரூ.20 லட்சம் வழங்கும்படி உத்தரவிட்டார்.
இந்த தம்பதி விவாகரத்து கோரி குடும்ப நல கோர்ட்டிலும் வழக்கு போட்டுள்ளார்கள்.