தமிழ்நாடு

கத்திமேல் நடந்து வந்து ஆசி வழங்கிய பூசாரி.

காசி காலபைரவர் கோவில் விழா 500 மீட்டர் தூரம் கத்திமேல் நடந்து வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கிய பூசாரி

Published On 2023-01-20 06:23 GMT   |   Update On 2023-01-20 06:23 GMT
  • வைர முனீஸ்வரன் கோவில் பூசாரி மாரியப்பன் சாமி ஆடியபடி பட்டாகத்தி மீது ஏரி நின்றும் கத்தி மீது நடந்தும் 500 மீட்டர் தூரம் ஊர்வலமாக சென்று கோவில் வளாகத்தை வந்து அடைந்தார்.
  • வைர முனீஸ்வரன், காசி கால பைரவர் ஆகிய சாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகிலுள்ள துட்டம்பட்டி பகுதியில் எழுந்தருளிய காசி காலபைரவர், வைரமுனிஸ்வரர் கோவில் தை மாத திருவிழாவை முன்னிட்டு சரபங்கா ஆற்றில் இருந்து புனித தீர்த்தம், பூங்கரகம் எடுத்து கொண்டு பம்பை மேளம் முழங்க வரும் நிகழ்ச்சி நடந்தது.

அப்போது வைர முனீஸ்வரன் கோவில் பூசாரி மாரியப்பன் சாமி ஆடியபடி பட்டாகத்தி மீது ஏரி நின்றும் கத்தி மீது நடந்தும் 500 மீட்டர் தூரம் ஊர்வலமாக சென்று கோவில் வளாகத்தை வந்து அடைந்தார்,

அப்போது கோவில் வளாகத்தில் திரண்டு இருந்த பக்தர்கள் குழந்தை வரம், தொழில் முன்னேற்றம், வேண்டி வணங்கியவர்களுக்கு தன்னிடம் இருந்த எலுமிச்சை கனியை கொடுத்து ஆசி வழங்கினார். பிறகு கத்தி மீது இருந்து இறங்கி கோவிலுக்குள் சென்றார்.

தொடர்ந்து வைர முனீஸ்வரன், காசி கால பைரவர் ஆகிய சாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News