தமிழ்நாடு செய்திகள்

சின்னசேலம் அருகே கலவரம் நடந்த பள்ளியில் தடயவியல் துறையினர் நேரில் ஆய்வு

Published On 2022-07-19 13:44 IST   |   Update On 2022-07-19 13:44:00 IST
  • பள்ளி மாணவி இறப்பு தொடர்பாக கடந்த 17-ந் தேதி வன்முறை வெடித்தது.
  • சிதறிகிடக்கும் பொருட்கள், வன்முறையால் எரிக்கப்பட்ட பஸ்கள், ஆவணங்கள் குறித்து தடயவியல் துறையினர் ஆய்வு நடத்தினர்.

சின்னசேலம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இவரது இறப்பு தொடர்பாக கடந்த 17-ந் தேதி வன்முறை வெடித்தது.

இந்த கலவரத்தில் மாணவி ஸ்ரீமதி படித்த பள்ளிக்கூடம் சூறையாடப்பட்டது. அங்குள்ள பஸ்களுக்கும் தீ வைக்கப்பட்டதால் பலத்த சேதம் அடைந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதனிடையே தடயவியல் துறையினர் துணை இயக்குனர் சண்முகம் தலைமையில் வன்முறை நடந்த பள்ளிக்கு இன்று மதியம் சென்றனர். அங்கு சிதறிகிடக்கும் பொருட்கள், வன்முறையால் எரிக்கப்பட்ட பஸ்கள், ஆவணங்கள் குறித்தும் ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வின்போது வெளியாட்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து அதிரடி ஆய்வு நடந்து வருகிறது.

Tags:    

Similar News