தமிழ்நாடு செய்திகள்

சாலையோரத்தில் வெள்ளை நிறத்தில் ஆவி பறக்க வந்த தண்ணீரை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்த காட்சி.

சாலையோர பள்ளத்தில் வெள்ளை நிறத்தில் ஆவி பறக்க திடீரென வெளியேறிய தண்ணீர்

Published On 2023-10-24 09:41 IST   |   Update On 2023-10-24 09:41:00 IST
  • சிலர் பால் போன்று இருந்ததால் ஆர்வ மிகுதியால் தண்ணீரை கையில் எடுத்து தலையில் தெளித்தும் கொண்டனர்.
  • இதுதொடர்பாக உடனடியாக மாநகராட்சி ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சிவகாசி:

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ரெயில் நிலையம் செல்லும் சாலையின் ஓரத்தில் நேற்று திடீரென்று ஊற்று ஏற்பட்டு அதில் தண்ணீர் வெள்ளை நிறமாக வந்தது.

நேற்று ஆயுத பூஜை விடுமுறை தினம் என்பதால் அந்த பகுதி சாலை வெறிச்சோடி கிடந்தது. வாகனங்களில் சென்று வந்தோரை விட நடந்து சென்றவர்கள் தான் அதிகம் காணப்பட்டனர். சாலையோரம் வெள்ளை நிறத்தில் பால் போன்று தண்ணீர் வெளியேறியதை அந்தப் பகுதியில் நடந்து சென்ற பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.

ஒரு சிலர் அருகில் சென்று ஆவிபறக்க வந்த தண்ணீரை கையில் அள்ளி பருகினர். அந்த தண்ணீரில் உப்புத்தன்மை இல்லாமலும், பால்போன்று வெள்ளை நிறத்தில் இருந்ததாகவும் கூறினர். அதில் சிலர் பால் போன்று இருந்ததால் ஆர்வ மிகுதியால் தண்ணீரை கையில் எடுத்து தலையில் தெளித்தும் கொண்டனர்.

மேலும் இதுதொடர்பாக உடனடியாக மாநகராட்சி ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் விரைந்து வந்து அந்த தண்ணீரை பாட்டிலில் எடுத்து ஆய்வு செய்வதற்காக கொண்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News