தமிழ்நாடு செய்திகள்

பல்லடம் கரைப்புதூரில் உள்ள நிறுவனம் ஒன்றில் தேங்கி கிடக்கும் காடா துணிகள்.

உலக வர்த்தகம் பாதிப்பால் திருப்பூர்-கோவையில் ரூ.1000 கோடி மதிப்பிலான காடாத்துணிகள் தேக்கம்

Published On 2023-09-30 13:43 IST   |   Update On 2023-09-30 13:43:00 IST
  • உலக வர்த்தகம் பாதிப்பால் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு துணி விற்பனை பாதிப்படைந்துள்ளது.
  • இயற்கை பருத்தி இழைகளால் உற்பத்தி செய்யப்பட்ட காடா துணி பைகள் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும்.

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விசைத்தறிகள் மூலம் ஜவுளி உற்பத்திக்கான காடாத்துணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தொழிலை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர்.

இந்தநிலையில் உலக வர்த்தகம் பாதிப்பால் விசைத்தறி காடா துணி விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் கரைப்புதூர் சக்திவேல் கூறியதாவது:-

உலக வர்த்தகம் பாதிப்பால் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு துணி விற்பனை பாதிப்படைந்துள்ளது. வட மாநிலங்களில் துணி உற்பத்தி செலவு குறைவாக இருப்பதால் அவர்கள் காடா துணியை விலை குறைவாக கொடுக்க முடிகிறது. கடந்த 5 மாதத்தில் திருப்பூர், கோவை மாவட்டத்தில் ரூ.1000 கோடி மதிப்பிலான விசைத்தறி காடா துணி விற்பனை ஆகாமல் தேக்கம் அடைந்துள்ளது.

எனவே தமிழ்நாட்டில் புதிய ஜவுளி கொள்கை அமைத்து விசைத்தறி தொழில் வளர்ச்சிக்கு என்று தனியாக அதிகாரிகள் குழுவை அமைத்து ஆராய்ந்து மானியம், வங்கி கடன் உதவி உள்ளிட்ட தேவையானவற்றை கண்டறிந்து அவற்றை செய்து கொடுத்தால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் பழையபடி இயல்பு நிலைக்கு திரும்பும். இயற்கை பருத்தி இழைகளால் உற்பத்தி செய்யப்பட்ட காடா துணி பைகள் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News