தமிழ்நாடு செய்திகள்

சென்னை-புறநகர் பகுதியில் கேன் குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்களில் அதிரடி சோதனை

Published On 2023-07-19 12:05 IST   |   Update On 2023-07-19 12:05:00 IST
  • பொதுவாக குடிநீருக்கு பயன்படுத்தப்படும் கேன்கள் சுத்தமாக இருப்பது இல்லை.
  • ஆழ்துளை கிணறு மூலம் எடுக்கப்படும் குடிநீர் முறையாக சுத்திகரிப்பு செய்யப்படுகிறதா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

சென்னை:

சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் கேன் குடிநீரை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

அடுக்குமாடி குடியிருப்புகள் மட்டுமின்றி தனி வீடுகளிலும் பெருமளவில் கேன் தண்ணீர் பயன்பாடு அதிகமாக உள்ளது.

சென்னை குடிநீர் வாரியம் மூலம் தண்ணீர் சப்ளை செய்த போதிலும் கேன் குடிநீர் விற்பனை அதிகரித்து வருகிறது.

தற்போது சென்னையில் பல்வேறு பகுதிகளில் தெருக்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பெரிய டேங்குகளில் சேகரித்து வைத்து கேன்கள், குடங்களில் பொதுமக்களுக்கு விற்பனை செய்கிறார்கள்.

பொதுவாக குடிநீருக்கு பயன்படுத்தப்படும் கேன்கள் சுத்தமாக இருப்பது இல்லை. பல ஆண்டுகளாக சுகாதாரமற்ற நிலையில் பயன்படுத்தி வருவதாக பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தது. ஆழ்துளை கிணறு மூலம் எடுக்கப்படும் குடிநீர் முறையாக சுத்திகரிப்பு செய்யப்படுகிறதா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

ஒரு சில கேன் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் முறையாக லைசென்சு வாங்காமலும், புதுப்பிக்காமலும் இத்தொழிலில் ஈடுபட்டு வருவதாக தரச்சான்று நிறுவனங்களுக்கு தெரிய வந்தது.

இதையடுத்து இந்திய தரநிலை பணியகம் (பி.ஐ. எஸ்.) அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறது. கேன் குடிநீர் கம்பெனிகளுக்கு அதிகாரிகள் சென்று சோதனை மேற்கொண்டனர். குடிநீரின் தரம், கேன்களின் சுகாதாரத்தன்மை மற்றும் தொழில் செய்வ தற்கான உரிமம் போன்றவற்றை ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து இந்திய தரநிலை பணியக சென்னை அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னையை சுற்றிலும் 725 கேன் குடிநீர் நிறுவங்கள் உரிமம் பெற்று செயல்பட்டு வருகின்றன. குடிநீர் தரம் குறித்த புகார்கள் வந்த நிலையில் கண்காணிப்பதோடு அதிரடி சோதனையும் நடத்தப்படுகிறது.

கேன்களில் தண்ணீரை அடைத்து விற்கும் தொழில் செய்ய மாதம் 12 விண்ணப்பங்கள் வருகின்றன. துறை சார்ந்த குழுக்கள் பெரும்பாலான நிறுவனங்களில் குடிநீர் தரத்தை ஆய்வு செய்வதோடு உரிமம் பெற்று நடக்கிறா? என்பதை ஆவணங்கள் மூலம் சோதனை செய்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News