தமிழ்நாடு

பயிர்க்கடனில் ரூ.3.50 கோடி மோசடி- கூட்டுறவு வங்கி ஆய்வாளர் சஸ்பெண்டு

Published On 2022-07-06 06:38 GMT   |   Update On 2022-07-06 06:38 GMT
  • முறைகேடு நிதியில் 1.50 கோடி ரூபாயை மோகன் சங்கத்துக்கு திருப்பி செலுத்திய நிலையில் மீது பணத்தை திருப்பி செலுத்தவில்லை.
  • வெங்கடேசை சஸ்பெண்டு செய்து மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

சேலம்:

சேலம் மாவட்டம் எடப்பாடி வெள்ளரிவெள்ளி தொடக்க வேளான் கூட்டுறவு கடன் சங்கத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய பயிர்க்கடனில் ரூ.3.50 கோடி முறைகேடு நடந்தது 6 மாதங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சங்க செயலாளர் மோகன் சஸ்பெண்டு செய்யப்பட்டார். பின்னர் முறைகேடு நிதியில் 1.50 கோடி ரூபாயை மோகன் சங்கத்துக்கு திருப்பி செலுத்திய நிலையில் மீது பணத்தை திருப்பி செலுத்தவில்லை. இந்த முறைகேடுக்கு மத்திய கூட்டுறவு வங்கியை சேர்ந்த ஆய்வாளர் வெங்கடேஷ் (வயது 40)என்பவர் உடந்தையாக செயல்பட்டது தெரிய வந்தது. இதனால் முறைகேடு நிதியில் பாதியை அவரிடம் வசூலிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து வெங்கடேசிடம் நடத்திய விசாரணையில் அவர் சரிவர பதில் அளிக்கவில்லை. இதையடுத்து வெங்கடேசை சஸ்பெண்டு செய்து மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News