தமிழ்நாடு செய்திகள்

சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் 2¼ மணி நேரம் தாமதம்

Published On 2022-11-06 10:30 IST   |   Update On 2022-11-06 10:30:00 IST
  • சேரன் எக்ஸ்பிரஸ் நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு வந்தபோது திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் 16 பெட்டிகள் கழன்று விபத்து ஏற்பட்டது.
  • காலை 6 மணிக்கு கோவைக்கு வர வேண்டிய சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் 2¼ மணி நேரம் தாமதமாக 8.16 மணிக்கு கோவை ரெயில் நிலையம் வந்தது.

கோவை:

சேரன் எக்ஸ்பிரஸ் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து தினந்தோறும் இரவு 10 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 6 மணிக்கு கோவை சந்திப்பு ரெயில் நிலையம் வந்து சேரும்.

நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு வந்தபோது திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் 16 பெட்டிகள் கழன்று விபத்து ஏற்பட்டது. பழுது சரி செய்யப்பட்டு ரெயில் தாமதமாக புறப்பட்டது. இதனால் காலை 6 மணிக்கு கோவைக்கு வர வேண்டிய சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் 2¼ மணி நேரம் தாமதமாக 8.16 மணிக்கு கோவை ரெயில் நிலையம் வந்தது. இதனால் பயணிகள் பரிதவிப்புக்கு ஆளானார்கள்.

Tags:    

Similar News