தமிழ்நாடு

சொத்து குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், உறவினர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

Published On 2023-11-06 06:51 GMT   |   Update On 2023-11-06 06:51 GMT
  • கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி 19-ந் தேதி கே.பி.அன்பழகன் மற்றும் அவருக்கு தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
  • வருமானத்திற்கு அதிகமாக ரூ. 45 கோடியே 20 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் அளவிற்கு சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்டுபிடித்தனர்.

தருமபுரி:

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி 19-ந் தேதி கே.பி.அன்பழகன் மற்றும் அவருக்கு தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அதில் வருமானத்திற்கு அதிகமாக ரூ. 45 கோடியே 20 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் அளவிற்கு சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் 10 ஆயிரம் பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையினை தருமபுரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். இதனை தொடர்ந்து நீதிமன்ற நடைமுறைகள் தொடங்கியது. அமைச்சர் மற்றும் உறவினர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், உறவினர்கள், சரவணன், சரவணக்குமார், மாணிக்கம், தனபால் உள்ளிட்ட 11 பேரும் இன்று முதல் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

Tags:    

Similar News