தமிழ்நாடு

சென்னையில் புதிய அரசியல் கட்சி தொடக்கம்: அலைடு மில்லன்னியல்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா

Published On 2023-01-07 12:38 GMT   |   Update On 2023-01-07 12:38 GMT
  • அலைடு மில்லன்னியல்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் நிறுவனர் கவுதம் சாகர் மஹாயான் ஆவார்.
  • இந்திய தேர்தல் ஆணையத்தால் அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

அலைடு மில்லன்னியல்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா (ஆம்ப்பீ) கட்சி தொடக்க விழா சென்னையில் நடந்தது.

படித்த, திறமைமிகுந்த இளைஞர்களுக்கு அரசியலில் பங்கேற்கவும் நாட்டுக்கு உழைக்கவும் நல்லதோர் வாய்ப்பை இக்கட்சி வழங்க இருக்கிறது. சரியானவர்களுக்கு நல்ல தளத்தை இக்கட்சி ஏற்படுத்தித்தர உறுதி பூண்டுள்ளது.

அலைடு மில்லன்னியல்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் நிறுவனர் கவுதம் சாகர் மஹாயான் ஆவார். நாட்டிலுள்ள இளைஞர்களை வலுப்படுத்துவதே தனது குறிக்கோள் என கூறியிருக்கிறார். 

இக்கட்சி, இந்திய தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் ஆம்ப்பீ கட்சியின் கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் கவுதம் சாகர் மஹாயான் பேசுகையில், "திறம் வாய்ந்த ஆற்றல் பயன்பாடு, எல்லாவற்றையும் உள்ளடக்கிய கல்வி, நீர் நிர்வாகம், நிலத்தடிநீர் சேமிப்பு, நிலத்தை அதிகபட்ச பயன்பாட்டுக்கு கொண்டுவருதல், சிறப்பான கழிவு மேலாண்மை, கூட்டுறவு இயக்கத்தை மீட்டுருவாக்கம் செய்தல் ஆகிய முக்கியக் கொள்கைகளை இக்கட்சி தன்னகத்தே கொண்டு உள்ளது" என்றார்.

Tags:    

Similar News