தமிழ்நாடு

திருப்பூர் நஞ்சராயன்குளத்திற்கு வந்த ஆப்கானிஸ்தான் பறவை

Published On 2022-12-01 07:03 GMT   |   Update On 2022-12-01 07:04 GMT
  • பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நம் நாட்டின் இமயமலை பகுதிகளில் காணப்படும் நீலவால் பஞ்சுருட்டான் பறவைகள் திருப்பூர் நஞ்சராயன் குளத்துக்கு வலசை வந்துள்ளன.
  • நீலவால் பஞ்சுருட்டான் பறவைகள், பெரிய அளவு சிட்டுக்குருவி போல இருக்கும்.

திருப்பூர்:

குளிர் பிரதேசங்களில் வசிக்கும் பறவைகள், அக்கால நிலையை சமாளிக்க ஏதுவாக மிதவெப்ப மண்டல நாடுகளுக்கு வலசை செல்கின்றன. அவ்வகையில், பல்வேறு நாடுகளில் இருந்தும் பறவைகள் திருப்பூர் நஞ்சராயன் குளத்திற்கு வருகின்றன. தற்போது, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நம் நாட்டின் இமயமலை பகுதிகளில் காணப்படும் நீலவால் பஞ்சுருட்டான் பறவைகள் திருப்பூர் நஞ்சராயன் குளத்துக்கு வலசை வந்துள்ளன. இது குறித்து திருப்பூர் இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:-

நீலவால் பஞ்சுருட்டான் பறவைகள், பெரிய அளவு சிட்டுக்குருவி போல இருக்கும். தேனீ, தட்டான் பூச்சி போன்ற சிறு பூச்சியினங்களை மட்டுமே இவை உட்கொள்ளும். உறைபனியில் இருந்து தற்காத்துக் கொள்ள, முதல் ஆறு மாதங்கள் உடலில் கொழுப்பை சேர்க்கும். அதன் பின், நெடுந்தொலைவு பயணத்தை துவக்கி திருப்பூர் வந்து சேர்கின்றன.

இங்கு ஓய்வெடுத்து, இளைப்பாறி விட்டு மார்ச் கடைசி வாரத்தில் மீண்டும் தாயகத்துக்கே திரும்பிச் செல்லும். அங்கு சென்ற பின் இனப்பெருக்கம் செய்யும் என்றனர்.

Tags:    

Similar News