தமிழ்நாடு செய்திகள்
முதல்வர் ஸ்டாலின்

உயிரிழந்த உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்- முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

Published On 2022-04-23 18:57 IST   |   Update On 2022-04-23 18:57:00 IST
மதுரை சித்திரைத் திருவிழா பாதுகாப்புப் பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளரின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:

கோவை மாவட்டம், வடக்கிப்பாளையம் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய நாட்ராயன், மதுரை சித்திரைத் திருவிழா பாதுகாப்புப் பணியில் இருந்தபோது, கடந்த 19-4-2022 அன்று, இரவு சுமார் 10.30 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 

இந்த செய்தியை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் நாட்ராயனின் குடும்பத்தாருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு, உடனடியாக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து பத்து இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட ஆணையிட்டுள்ளார்.

Similar News