தமிழ்நாடு செய்திகள்
சிவசங்கர் பாபா

ஜாமீனில் வெளியே வந்தார் சிவசங்கர் பாபா

Published On 2022-04-23 16:13 IST   |   Update On 2022-04-23 16:13:00 IST
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.
சென்னை:

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நே‌ஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் தன் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி மாணவிகள் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்கின்றனர். இதுதொடர்பாக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15-ந் தேதி சிவசங்கர் பாபாவை போலீசார் கைது செய்தனர்.

மொத்தம் 8 வழக்குகளில் 6 வழக்குகளுக்கு சிவசங்கர் பாபாவுக்கு விசாரணை கோர்ட் ஜாமீன் வழங்கியது. ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் ஜாமீன் வழங்கியுள்ளது. மீதமுள்ள ஒரு வழக்கில் சென்னை ஐகோர்ட் நிபந்தனைகளோடு சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்கியது. இதனை தொடர்ந்து நேற்று மாலை புழல் சிறையில் இருந்து சிவசங்கர் பாபா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Similar News