தமிழ்நாடு செய்திகள்
சேலம், நாமக்கல்லில் பிரசித்திபெற்ற பாரம்பரிய கல்சட்டிக்கு புவிசார் குறியீடு பெற முயற்சி
கல் சட்டி செய்வதற்கு பயன்படும் மாவு கல்லில் மக்னீசியம் இருப்பதால், நேரடியாக உணவில் இந்த சத்து கலப்பதற்கு கல் சட்டி உதவும் என்கிறார்கள் டாக்டர்கள்.
சேலம்:
தமிழகத்தில் அந்தந்தப் பகுதிகளில் உள்ள பாரம்பரியப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஏற்கனவே மதுரை மல்லிகை, காஞ்சி பட்டு, பவானி ஜமக்காளம், நீலகிரி தேயிலை, தஞ்சை ஓவியங்கள், ஈரோடு மஞ்சள், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, காரைக்குடி கண்டாங்கி சேலை, பழனி பஞ்சாமிர்தம் ஆகியன புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்று உள்ளன. மேலும் தமிழகத்தை சேர்ந்த பல பாரம்பரிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற நாமக்கல் கல்சட்டிக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. மாக்கல்லை உடைத்து, அதில் இருந்து தயாரிக்கப்படும் சமையல் சாதனங்கள், பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இந்த கல்லிலான, பருப்புச்சட்டி, பனியார சட்டி, தோசைக்கல், விறகு அடுப்பில் வைத்து சமையல் செய்யும்போது, அந்த கல்லின் சூடு தன்மை நீண்ட நேரம் நீடிக்கக்கூடியது. அதுமட்டுமின்றி, கல்லில் இருக்கும் ஒருவித காரத்தன்மை, சமையலுக்கு சுவையையும், ருசியையும் கொடுக்கக்கூடியது.
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இந்த மாக்கல் அதிகளவில் கிடைக்கின்றன. சேலம் மாவட்டம் நங்கவள்ளியை அடுத்த, சின்னசோரகை வேப்பமுத்தாம் பட்டியில், மாக்கல்லில் சமையல் பாத்திரங்கள் தயாரிக்கும் ஆலைகள் இயங்கி வருகின்றன. மொத்தமாக பாறையை வெட்டியெடுத்து, சாதனங்களுக்கு தகுந்தாற்போல், அச்சுக்களை கொண்டு பொருட்களை உருவாக்குகின்றனர்
வியாபாரிகள், இந்த கல் சாதனங்களை வாங்கி விற்கின்றனர். பெரும்பாலும் கேரளம் மாநிலம் பாலக்காடு, கண்ணூர் உள்ளிட்ட பகுதி கிராமங்களில், இந்த கல் சாதனங்களில் தான் சமையல் நடக்கிறது. திருவிழாக்காலங்களில், மக்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்குகின்றனர்.
பெரிய சோரகையை அடுத்த வேப்பமுத்தம்பட்டியில் தான் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆலை உரிமையாளர்கள் டெண்டர் எடுத்து, பாறைகளை உடைத்து, அச்சுவடிவில் பருப்பு, பணியாரச்சட்டியையும், தோசைக் கல்லையும் தயாரிக்கின்றனர்.
இதன் எடை அதிகம். கேரளாவில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில், சமையலுக்கு இந்த கல்லை பயன்படுத்தி வருகின்றனர். சூடு அதிகளவில் தாங்கும் என்பதுடன் சுவையும், ருசியும் அதிகம் கிடைக்கும். விழாக்காலத்தில், அங்குள்ள மக்கள் அதிகம் இக்கல்லிலான பொருட்களை பயன்படுத்துவர்.
கல்சட்டி என்றும் அழைக்கப்படும் சோப்புக் கல்லால் செய்யப்பட்ட பாத்திரங்கள் மற்றும் பொருட்கள் புளி மற்றும் சுண்ணாம்பு சார்ந்த உணவுகள், குறிப்பாக குழம்பு தயாரிக்க பயன்படுகின்றன. கல்சட்டியைத் தவிர, சிலைகள், விளக்குகள், காகித எடை, சிறிய பொம்மைகள் போன்ற இந்த சோப்புக் கற்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பிற பொருட்களும் உள்ளன. நாமக்கல் கல் பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம், அறிவுசார் சொத்து வசதி மையம் ஆகியவை இவற்றுக்கு விண்ணப்பித்து உள்ளன.
நாமக்கல் கல்சட்டிக்கான விண்ணப்பம் தாக்கல் செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே 2019-ம் ஆண்டு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் அது திரும்பப் பெறப்பட்டது. தற்போது மீண்டும் கல்சட்டிக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது.
கல் சட்டி செய்வதற்கு பயன்படும் மாவு கல்லில் மக்னீசியம் இருப்பதால், நேரடியாக உணவில் இந்த சத்து கலப்பதற்கு கல் சட்டி உதவும் என்கிறார்கள் டாக்டர்கள். பிரிட்ஜ் பயன்பாட்டுக்கு வரும்வரை, பல இல்லங்களில் உணவு கெட்டுப்போகாமல் இருக்க கல் சட்டிகள் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள கிராமங்களில் மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு பலாப்பழம், அன்னாசி, பேரிக்காய், கொய்யா, மாம்பழம், காபி, மிளகு, கொண்டைக்கடலை, சீரகம் என்று பல பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இருந்தாலும், கொல்லிமலையில் 80 சதவிகிதம் மிளகுதான் பயிரிடப்படுகின்றன. இந்த மிளகு இயற்கையாகவே காரத்தன்மை அதிகம் உடையது. மற்றை மிளகை விட மருத்துவ குணம் இதற்கு அதிகம் உண்டு. இதற்கும் புவிசார் குறியீடு வழங்க கேட்டு விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது.