தமிழ்நாடு செய்திகள்
பெரியார் பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை- உதவி பேராசிரியர் சிறையில் அடைப்பு
பெரியார் பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி பேராசிரியர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சேலம்:
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் பிரேம்குமார் . இவர் மீது முதுகலை 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவர் சேலம் சூரமங்கலம் மகளிர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.
அதில் கடந்த ஓராண்டு காலமாக பாலியல் ரீதியாக பிரேம் குமார் தன்னை தொடுவதுடன், இரட்டை அர்த்தத்தில் பேசுவதாகவும், ஜாதி பெயரை சொல்லி திட்டுவதாகவும் கூறி இருந்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுப்புலெட்சமி, உதவி பேராசிரியர் பிரேம்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இதில் பிரேம்குமாருக்கு ஆதரவாக மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். மேலும் அவரது கர்ப்பிணி மனைவி தனது கணவர் எந்த தவறும் செய்யவில்லை என்றும் வீடியோ வெளியிட்டார்.
இதற்கிடையே உதவி பேராசிரியர் பிரேம்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சரண் அடைந்து மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. அதன்படி உதவி பேராசிரியர் பிரேம்குமார் நேற்று சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி குமரகுரு முன்னிலையில் சரண் அடைந்து ஜாமீன் கேட்டார்.
அதே நேரத்தில் புகார் கொடுத்த மாணவியும் கோர்ட்டில் ஆஜராகி நான் புகாரில் கூறி இருப்பது உண்மை தான் என கூறினார். இதையடுத்து மனுவை விசாரித்த நீதிபதி குமரகுரு, உதவி பேராசிரியர் பிரேம்குமார் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் அவரை கைது செய்து சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார். அதன்படி அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.