செய்திகள்
கல்வி கட்டணத்தை குறைக்க கோரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து இன்று 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.

பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக போராட்டம்

Published On 2021-02-06 14:13 IST   |   Update On 2021-02-06 14:13:00 IST
கல்வி கட்டணத்தை குறைக்ககோரி பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் போக்குவரத்து துறையின் கீழ் செயல்பட்டு வந்த மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார துறையின் கீழ் இயங்கும் அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனையாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையாகவும் தற்போது கொரோனா சிறப்பு மருத்துவமனையாகவும் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் மருத்துவம் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் அரசு மருத்துவ கல்லூரியாக அறிவிக்கபட்டும் தனியார் மருத்துவ கல்லூரியில் வசூலிக்கும் கல்வி கட்டணமான 4 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும், அரசு கல்லூரியில் வசூலிக்கும் 13 ஆயிரத்து 600 ரூபாயை கல்லூரி நிர்வாகம் வசூலிக்க வேண்டும் என்று மாணவ-மாணவிகள் அவர்களது பெற்றோர்கள் தொடர்ந்து தமிழக அரசிடம் கோரிக்கையை முன்வைத்து நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து கல்வி கட்டணத்தை குறைக்க கோரி 100- க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்லூரியின் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு கல்வி கட்டணத்தை குறைத்து உத்தரவு வழங்கும் வரையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Similar News