செய்திகள்
கொம்பன் யானை மீண்டும் நீலகிரி திரும்பியது- பொதுமக்கள் அச்சம்
3 பேரை அடித்துக்கொன்று கேரளா தப்பிய ஒற்றை கொம்பன் யானை நீலகிரியில் உள்ள சேரம்பாடிக்கு வந்துவிட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே 1½ மாதத்துக்கு முன்பு அடுத்தடுத்து 3 பேரை ஒற்றை கொம்பன் யானை அடித்துக்கொன்றது.
3 கும்கிகளுடன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயன்றனர். ட்ரோன் கேமராக்கள் மூலமும் தேடப்பட்டது. ஆனால் ஒற்றை கொம்பன் யானை யானைகளுடன் கலந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டது. சமீபத்தில் கேரள மாநிலம் நீலம்பூர் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த யானையை ஆதிவாசி மக்கள் பார்த்துள்ளனர்.
இதனையடுத்து தமிழக- கேரள வனத்துறையினர் இணைத்து யானையை கண்காணித்து வந்தனர். சமீபத்தில் நீலகிரியையொட்டியுள்ள கேரள வனப்பகுதிக்குள் நுழைந்ததை கண்டு பிடித்தனர்.
நேற்று ஒற்றை கொம்பன் யானை நீலகிரியில் உள்ள சேரம்பாடிக்கு வந்துவிட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வனத்துறையால் சங்கர் என்று அழைக்கப்படும் இந்த ஒற்றை கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி முகாமில் அடைக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.