செய்திகள்
கொள்ளை

விழுப்புரம் அருகே என்ஜினீயர் வீட்டில் 35 பவுன் நகை கொள்ளை

Published On 2020-11-27 05:14 GMT   |   Update On 2020-11-27 05:14 GMT
விழுப்புரம் அருகே என்ஜினீயர் வீட்டில் 35 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வானூர்:

விழுப்புரம் அருகே ஆரோவில் போலீஸ் சரகம் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார். (வயது 40).

சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். தற்போது புயல் மழை காரணமாக சசிக்குமார் ஊருக்கு விடுமுறை வந்து உள்ளார். நேற்று இரவு ஒரு அறையில் தனது மனைவி குழந்தைகளுடன் சசிக்குமார் தூங்கினார். இன்னொரு அறையில் அவரது தாய் லலிதா தூங்கினார்.

நள்ளிரவு சமயம் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த நகையை எடுத்தனர். பின்னர் இன்னொருக்கு அறைக்கு சென்ற கொள்ளையர்கள் அங்கு தூங்கி கொண்டிருந்த லலிதா கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்தனர்.

அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டார். அவரது சத்தம் கேட்டு சசிக்குமார் எழுந்து வந்தார். சுதாரித்து கொண்ட கொள்ளையர்கள் அங்கிருந்து நகையுடன் தப்பி ஓடிவிட்டனர்.

பதறி போன சசிக்குமார் பீரோ இருந்த அறைக்கு சென்றார், அங்கு பீரோவில் இருந்த 30 நகை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் ஆரோவில் போலீசில் புகார் செய்தார். கோட்டக்குப்பம் போலீஸ் டி.எஸ்.பி. அஜய் தங்கம், ஆரோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்மணி ஆகியோர் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். கைரேகை நிபுணர் சோமசுந்தரம் கொள்ளையர்களின் ரேகையை பதிவு செய்து துப்பு துலக்கி வருகிறார்.


Tags:    

Similar News