செய்திகள்
ஐம்பொன்னாலான உற்சவர் முருகன் சிலை திருட்டு

ஐம்பொன்னாலான உற்சவர் முருகன் சிலை திருட்டு- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

Published On 2020-08-14 17:07 IST   |   Update On 2020-08-14 17:07:00 IST
ஈரோடு கல்யாணசுந்தரனார் வீதிப்பகுதியில் உள்ள வெற்றிவேல் முருகன் கோயிலில் இருந்த பழமையான ஐம்பொன்னால் ஆன உற்சவர் முருகன் சிலையை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளன.
ஈரோடு:

ஈரோடு கல்யாணசுந்தரனார் வீதிப்பகுதியில் உள்ள வெற்றிவேல் முருகன் கோயிலில் இருந்த பழமையான ஐம்பொன்னால் ஆன உற்சவர் முருகன் சிலையை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளன.

இன்று அதிகாலை பூஜைக்காக கோயிலை திறக்க வந்த பூசாரி, கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததையும், உற்சவர் சிலை திருடப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து கோயில் நிர்வாகிகளுடன் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்ததன் பேரில், சிலையை திருடிச் சென்றவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News