செய்திகள்
புதுச்சேரியில் இன்று 109 பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 109 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,999 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 10,77,618 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 26,816 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 3,00,937 பேரும், தமிழகத்தில் 1,65,714 பேரும், டெல்லியில் 1,21,582, கர்நாடகத்தில் 59,652 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 109 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,999ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,157 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 817 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.