செய்திகள்
அமைச்சர் செங்கோட்டையன்

2013ல் ஆசிரியர் தகுதித் தோ்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்குமா?- அமைச்சர் பதில்

Published On 2020-07-02 14:44 IST   |   Update On 2020-07-02 14:44:00 IST
2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்குவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய வங்கியின் மூலம் இதுவரை நூறு கோடி ரூபாய் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நீட் தேர்வுக்கு இ- பாக்ஸ் நிறுவனம் மூலம் 10 நாட்களாக மாணவர்களுக்கு நடைபெற்று வருகிறது. தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்பது பற்றி கல்வியாளர்கள் மற்றும் முதலமைச்சருடன் கலந்தாலோசித்த பிறகு முடிவெடுக்கப்படும்.

அரசு பள்ளிகளில் 7,200 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ள நிலையில், 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்குவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News