செய்திகள்
நிவாரண பொருட்களை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வழங்கினார்

15 ஆயிரம் பேருக்கு நிவாரண பொருட்கள் - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வழங்கினார்

Published On 2020-05-21 09:14 IST   |   Update On 2020-05-21 09:14:00 IST
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரம் பேருக்கு நிவாரண பொருட்களை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
தாம்பரம்:

சென்னையை அடுத்த தாம்பரம் தாலுகாவுக்கு உட்பட்ட பெரும்பாக்கம் ஊராட்சியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் அமைந்துள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக குடிசை மாற்று வாரிய பகுதிகள் ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட அந்த பகுதியில் வசிக்கும் 15 ஆயிரம் பேருக்கு பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மற்றும் இந்திய புகையிலை நிறுவனம் இணைந்து, ரூ.50 லட்சம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

இதில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் கலந்துகொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

இதில் மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டல மேம்பாட்டு அதிகாரி சண்முகசுந்தரம், பரங்கிமலை துணை கமிஷனர் பிரபாகரன், தாம்பரம் கோட்டாட்சியர் ராஜ்குமார், தாசில்தார் சரவணன், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்திய புகையிலை நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News