செய்திகள்
பா.ஜனதா எம்.எல்.ஏ. சாமிநாதன்

தடை உத்தரவை மீறி அரிசி வழங்கிய பா.ஜனதா எம்.எல்.ஏ. சாமிநாதன் மீது வழக்கு

Published On 2020-03-31 07:57 GMT   |   Update On 2020-03-31 07:57 GMT
லாஸ்பேட்டை நெசவாளர் நகரில் தடை உத்தரவை மீறி அரிசி வழங்கிய பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. சாமிநாதன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி:

புதுவையில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஊரடங்கு நேரத்தில் மக்களை யாரும் கும்பலாக கூட்டக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது. மக்களை கூட்டும் மளிகை கடைகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் லாஸ்பேட்டை நெசவாளர் நகரில் தடை உத்தரவை மீறி அப்பகுதி மக்களுக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ. சாமிநாதன் இலவச அரிசி வழங்கினார். இதனை வாங்குவதற்காக மக்கள் முண்டியத்துக்கொண்டு வந்தனர்.

இதனால் அங்கு நெரிசல் ஏற்பட்டது. மக்கள் யாரும் சமூக விலகலை கடைபிடிக்கவில்லை. இதனைத்தொடர்ந்து லாஸ்பேட்டை போலீசார் சாமிநாதன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதுவையில் இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறியதாக 381 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயிரத்து 237 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 211 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே பொதுமக்களுக்கு காய்கறி விநியோகம் செய்தது தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News