செய்திகள்
திண்டுக்கல் சீனிவாசன்

என் பேரன் போல் நினைத்தேன்- வருத்தம் தெரிவித்த திண்டுக்கல் சீனிவாசன்

Published On 2020-02-06 08:30 GMT   |   Update On 2020-02-06 09:53 GMT
சிறுவனை செருப்பை கழற்ற வைத்தது தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தன் பேரன்கள் போல் சிறுவர்கள் இருந்ததால் அழைத்ததாக தெரிவித்துள்ளார்.
ஊட்டி:

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது செருப்பை சிறுவனை அழைத்து கழற்றிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு குழந்தைகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

முதுமலையில் நடந்த யானைகள் முகாமை தொடங்கி வைக்க சென்றேன். அப்போது கோவிலில் சாமி கும்பிட வேண்டும் என்று கூறினார்கள்.

இதனால் செருப்பை கழற்ற அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை அழைத்தேன். அந்த சிறுவன் எனக்கு பேரன் மாதிரி. என் பேரன்கள் போல் சிறுவர்கள் இருந்ததால் செருப்பை கழற்ற அழைத்தேன்.



இதில் எனக்கு வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது. பெரியவர்களை செருப்பை கழற்ற அழைத்தால் அது தவறாகி விடும் என்பதால் தான் சிறுவனை அழைத்தேன். மற்றபடி வேறு எந்த நோக்கமும் எனக்கு கிடையாது.

இந்த சம்பவம் விவாதப் பொருளாக மாறிவிட்டதால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். அது அவர்களது கண்ணோட்டம். எனக்கு அவ்வாறு எந்த எண்ணமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News