செய்திகள்
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மகாலட்சுமி.

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பொள்ளாச்சி மாணவி திடீர் போராட்டம்

Published On 2019-03-29 17:02 IST   |   Update On 2019-03-29 17:02:00 IST
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொள்ளாச்சியை சேர்ந்த கல்லூரி மாணவி திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மகிழம்பட்டியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 20) கல்லூரி மாணவி.

இவருக்கு பேஸ்புக் மூலம் மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சேர்ந்த அஜீத்குமார் என்ற வாலிபர் அறிமுகமானார். இருவரும் கருத்துக்களை பரிமாற்றம் செய்து காதலில் விழுந்தனர். அதன்பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

நாளடைவில் அஜீத் பிரகாஷ், மாணவி மகாலட்சுமியுடன் சேர்ந்து வாழ மறுத்து விட்டார். மேலும் மகாலட்சுமியிடம் இருந்து வரதட்சணையாக கொடுத்த நகை, பணத்தை பிடுங்கிக்கொண்டு விரட்டி விட்டார்.

மனவேதனையில் இருந்த மகாலட்சுமி இன்று மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். தனக்கு நியாயம் வழங்கக் கோரி அங்குள்ள வளாகத்தில் அவர் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பாதுகாப்பு பணியில் இருந்த தல்லாகுளம் போலீசார் மகாலட்சுமியை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

ஏற்கனவே பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இன்று பொள்ளாச்சியை சேர்ந்த மற்றொரு கல்லூரி மாணவி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News