செய்திகள்
ஸ்டீபன் ஜோசப்

குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு: தனியார் காப்பக நிர்வாகிக்கு 14 ஆண்டு ஜெயில் தண்டனை

Published On 2016-12-28 16:39 IST   |   Update On 2016-12-28 16:39:00 IST
ஆதரவற்ற குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக தனியார் காப்பக நிர்வாகிக்கு 14 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
நெல்லை:

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள மூக்குபீறியில் தனியார் ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வந்தது. இந்த காப்பகத்தின் நிர்வாகியாக ஸ்டீபன் ஜோசப் என்பவர் இருந்து வந்தார்.

இங்கு 41 குழந்தைகள் இருந்தனர். அதில் 23 பெண் குழந்தைகள் ஆவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள 8 குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதாக நாசரேத் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் காப்பக நிர்வாகி ஸ்டீபன் ஜோசப்பை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை இன்று நெல்லை 2-வது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி அப்துல்காதர் முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட ஸ்டீபன் ஜோசப்பிற்கு 14 வருடம் ஜெயில் தண்டனையும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தலா 1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்ப்பு கூறினார்.

Similar News