செய்திகள்

கொளப்பாக்கம் அருகே மகன் கண் எதிரே லாரி மோதி தந்தை பலி

Published On 2016-10-21 09:15 IST   |   Update On 2016-10-21 09:15:00 IST
கொளப்பாக்கம் அருகே சாலையில் விழுந்த பையை எடுத்தபோது, மகன் கண் எதிரே லாரி மோதி தந்தை பலியானார்.
வண்டலூர்:

சேலம் மாவட்டம் குகை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 62), இவரது மகன் அரிஅரி கார்த்திகேயன் (24). இவர் சென்னை கேளம்பாக்கத்தில் தங்கி அதே பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்த நிலையில் தனது மகனை பார்ப்பதற்காக ராஜேந்திரன் சேலத்தில் இருந்து ரெயில் மூலம் நேற்று வண்டலூர் வந்தார். தந்தையை அரிஅரி கார்த்தி கேயன் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கேளம்பாக்கம் சாலையில் சென்று கொண்டு இருந்தார்.

கொளப்பாக்கம் அருகே சென்ற போது ராஜேந்திரன் கையில் வைத்திருந்த கைப்பை தவறி சாலையில் விழுந்தது. உடனே மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய ராஜேந்திரன், கீழே விழுந்த கைப்பையை எடுத்தார். அப்போது கண்இமைக்கும் நேரத்தில் அந்த வழியாக வந்த லாரி ராஜேந்திரன் மீது மோதியது.

இதில் மகன் கண்எதிரே ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Similar News