செய்திகள்

ஒகேனக்கல் அருகே ஆட்டோ மீது தனியார் பஸ் மோதி - 2 பேர் பலி

Published On 2016-09-01 15:57 IST   |   Update On 2016-09-01 15:57:00 IST
ஒகேனக்கல் அருகே நேற்று மாலை ஆட்டோ மீது தனியார் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் பலியானர்.
ஏரியூர்:

தர்மபுரியில் இருந்து ஒகேனக்கல்லுக்கு நேற்று மாலை தனியார் பஸ் சென்றது. அந்த பஸ் பென்னாகரம்-ஒகேனக்கல் வழியில் மடம் பிரிவு ரோடு அருகே வந்தபோது ஒகேனக்கல்லில் இருந்து வந்த ஆட்டோ மீது எதிர்பாராத மோதியது.

இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த கோடல்பட்டியைச் சேர்ந்த சின்னமாதையன் மகன் துரைராஜ்(35), பொச்சராம் பட்டியைச் சேர்ந்த முனியப்பன் மனைவி கவுரம்மா(55) ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். மேலும் ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

பலத்த காயம் அடைந்த துரைராஜையும், கவுரம்மாவையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த ஒகேனக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து துரைராஜ், கவுரம்மா ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News