செய்திகள்

விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை இடையே தண்டவாளத்தில் நடந்து சென்று கண்காணிக்கும் போலீசார்

Published On 2016-08-11 11:26 IST   |   Update On 2016-08-11 11:26:00 IST
ரெயிலில் ரூபாய் 6 கோடி கொள்ளை போனது தொடர்பான விசாரணையில் விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை இடையே தண்டவாளத்தில் நடந்து சென்று போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

விருத்தாசலம்:

சேலத்தில் இருந்து சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.6 கோடி கொள்ளைபோனது.

எந்த இடத்தில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது என்பதில் குழப்பமான நிலை நிலவி வருகிறது. போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமலைசாமி தலைமையில் போலீசார் விருத்தாசலம்- உளுந்தூர்பேட்டை இடையே உள்ள தண்ட வாள பகுதியில் இன்று நடந்து சென்று தடயங்கள் ஏதும் சிக்குகிறதா? என்று ஆய்வு செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி விருத்தாசலம் போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர்கள் சேதுபதி, தமிழ்மாறன், சப்-இன்ஸ்பெக்டர்கள் நரசிம்மஜோதி, குமார், காமினாபானு, புஷ்பராஜ் மற்றும் போலீசார் 2 கி.மீ தூரத்துக்கு 5 பேர் என்ற வீதத்தில் தண்டவாளத்தில் நடந்து சென்று கண்காணிப்பு பணியை தொடங்கினர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.

Similar News