செய்திகள்

மதுக்கடைகளை திறந்து மாணவர்களை குடிகாரர்களாக மாற்றியது திராவிட கட்சிகள்: அன்புமணி பேச்சு

Published On 2016-04-03 22:51 IST   |   Update On 2016-04-03 22:51:00 IST
மதுக்கடைகளை திறந்து மாணவர்களை குடிகாரர்களாக மாற்றியது திராவிட கட்சிகள் என்று அன்புமணி பேசினார்.
காஞ்சீபுரம்:

காஞ்சிபுரத்தில் பா.ம.க. சார்பில் உங்கள் ஊர் உங்கள் அன்புமணி என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. வணிகர்கள், நெசவா ளர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என 25-க்கும் மேற்பட்ட அமைப்பினர் கலந்து கொண்டனர். இதில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

இந்தியா முழுமைக்கும் திட்டங்கள் தீட்டிய எங்களுக்கு தமிழக திட்டங்கள் என்பது சாதாரணமானது. 50 ஆண்ட காலம் தமிழகத்தை திராவிட கட்சிகள் சீர்கேடு ஆக்கியுள்ளன. அதனை சீர்படுத்த எங்களுக்கு 5 ஆண்டுகள் வாய்ப்பு தாருங்கள்.

அனைத்து கட்சிகளும் அடுத்த தேர்தலை பற்றியே நினைக்கும் பாமக மட்டுமே அடுத்த தலைமுறை பற்றி சிந்திக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக உண்மையான எதிர்கட்சியாக செயல்பட்டது பாமக மட்டுமே. தற்போது சிறுவர்கள் பெண்கள் என பல தரப்பட்டவர்களும் மது பழக்கத்திற்கு ஆளாகி உள்ளனர். ஒருஒரு கிராமத்திலும் மதுவால் 60 விதவைகள் உள்ளனர். வாக்குகாக மட்டும் மது விலக்கு பற்றி பேசும் கட்சி பா.ம.க. அல்ல. பல ஆண்டுகளாக மதுவிற்கு எதிராக போராடி வருகிறோம்.

பிற கட்சிகள் மது விலக்கினை தற்போது தான் கையில் எடுத்துக் கொண்டுள்ளது. விவசாய மேம்பாட்டிற்காக அந்த துறைக்கு வேளாண்துறை, தோட்ட கலைதுறை, நீர் மேலாண்மை துறை என 3 அமைச்சர்கள் நியமிக்கப்படுவர். விவசாயத்திற்கு இந்தியாவில் எங்குமில்லாத வகையில் தனி பட்ஜெட் போடப்பட்டும்.

சமீபத்தில் பெய்த பெரு மழையின் போது சரியான திட்டமிடல் இல்லாததால் 32 டி.எம்.சி. நீர் கடலில் வீணாக கலந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாலாற்றில் 5 கிலோ மீட்டருக்கு 1 என தடுப்பணைகள் கட்டுவோம். காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆட்சியாளர்களின் அணுகு முறை சரியில்லாத காரணத்தினால் 75 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க பா.ம.க. துணை நிற்கும்.

காஞ்சீபுரத்தில் போலி பட்டு இடைத்தரகர்கள் மற்றும் அரசியில் தலையீடு அனைத்தும் ஒழிக்கப்பட்டு நெசவாளர்களின் நலன் காக்கப்படும். தமிழகத்தில் 4532 நூலகங்கள் உள்ளன. அவற்றில் 60 சதவீததிற்கு நூலகர்களே இல்லை.
ஆனால் 8 ஆயிரம் டாஸ்மாக் பார் உள்ளது. பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிகாலத்தில் 12 ஆயிரம் புதிய பள்ளிகளை திறந்தார். ஆனால் 2 திராவிட கட்சிகளை சேர்ந்து டாஸ்மாக் பார்களை மட்டுமே திறந்து மாணவர்களை குடிகாரர்களாக ஆக்கியது.

அறிஞர் அண்ணா மது விலக்கில் உறுதியாக இருந்தார். அதன் முலம் பெறும் வருவாய் குஷ்டரோகி கையில் உள்ள வெண்ணெய் போன்றது எனக் கூறினார். ஆனால் அவர் உருவாக்கிய தி.மு.க. அவர் வழி நடப்பதாக கூறும் அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் மதுக்கடைகளை திறந்தன. ஆனால் நாங்கள் மது விலக்கில் உறுதியாக உள்ளோம். எனவே அண்ணாவின் கொள்கைகளை உண்மையாக பின்பற்றுபவர்கள் நாங்களே.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News