விளையாட்டு
null

உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் - இந்தியாவுக்கு முதல் முறையாக தங்கப் பதக்கம் - சாதித்து காட்டிய தமிழன்

Published On 2025-09-16 01:49 IST   |   Update On 2025-09-16 01:52:00 IST
  • 22 வயதான ஆனந்த்குமார், சீனியர் ஆண்கள் பிரிவில் 1000 மீட்டர் பிரிவில் விளையாடினார்.
  • இதே சாம்பியன்ஷிப்பில் 500 மீட்டர் ஸ்பிரிண்ட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் நடைபெற்ற ஸ்பீடு ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த இந்திய இளம் வீரர் ஆனந்த்குமார் வேல்குமார் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.

22 வயதான ஆனந்த்குமார், சீனியர் ஆண்கள் பிரிவில் 1000 மீட்டர் ஸ்பிரிண்ட் போட்டியில் 1:24.924 விநாடிகளில் இலக்கை அடைந்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

இதன் மூலம், ஸ்பீடு ஸ்கேட்டிங் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இதற்கு ஒரு நாள் முன்னதாக அவர், இதே சாம்பியன்ஷிப்பில் 500 மீட்டர் ஸ்பிரிண்ட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News