விளையாட்டு

இகா ஸ்வியாடெக்

விம்பிள்டன் டென்னிஸ்: ஸ்வியாடெக் 3-வது சுற்றுக்கு தகுதி

Published On 2022-07-01 11:25 IST   |   Update On 2022-07-01 11:25:00 IST
  • சர்வதேச டென்னிசில் அவர் தொடர்ச்சியாக பெற்ற 37-வது வெற்றி இதுவாகும்.
  • முன்னணி வீரர் பாடிஸ்டா அகுத் (ஸ்பெயின்) கொரோனா பாதிப்பு காரணமாக கடைசி நேரத்தில் விலகினார்.

லண்டன்:

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்றில் 5-ம் நிலை வீரர் சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-2,6-3,6-7 என்ற நேர் செட்டில் ஜோர்டான் தாம்சனை (ஆஸ்திரேலியா) வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

முன்னணி வீரர் பாடிஸ்டா அகுத் (ஸ்பெயின்) கொரோனா பாதிப்பு காரணமாக கடைசி நேரத்தில் விலகியதால் அவரை எதிர்த்து ஆட இருந்த டேனியல் காலன் (கொலம்பியா) களம் இறங்காமலேயே 3-வது சுற்றை எட்டினார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-4, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் போராடி பட்டினாமா கெர்கோவை (நெதர்லாந்து) வெளியேற்றி 3-வது சுற்றுக்குள் கால்பதித்தார். சர்வதேச டென்னிசில் அவர் தொடர்ச்சியாக பெற்ற 37-வது வெற்றி இதுவாகும்.

Tags:    

Similar News