விளையாட்டு
உலகின் நம்பர்-2 வீராங்கனையை வீழ்த்தி உலக சாம்பியன்ஷிப் காலிறுதிக்கு முன்னேறினார் பிவி சிந்து
- சீனா வீராங்கனையுடன் இதுவரை 5 முறை மோதி 3-ல் வெற்றி பெற்றுள்ளார்.
- காலிறுதியில் இந்தோனேசியா வீராங்கனையை எதிர்கொள்கிறார்.
உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் பி.வி. சிந்து (தரவரிசையில் 15ஆவது இடம்) உலகத் தரவரிசையில் 2ஆம் இடத்தில் உள்ள சீனாவின் வாங் ஜி யி-யை எதிர்கொண்டார்.
இதில் பி.வி. சிந்து 21-19, 21-15 என எளிதாக வெற்றி பெற்றார். இருவரும் நேருக்குநேர் மோதியதில் பி.வி. சிந்து 3-2 என வெற்றி பெற்றுள்ளார்.
30 வயதான பி.வி. சிந்து காலிறுதியில் இந்தோனேசியாவைச் சேர்ந்த உலகத் தரவரிசையில் 9ஆவது இடத்தில் இருக்கும் புத்ரி குசுமா வர்தானியை எதிர்கொள்கிறார். இதில் வெற்றி பெற்றால் உலக சாம்பியன்ஷிப்பில் 6 பதக்கம் வென்றவர் என்ற சாதனையை சமன் செய்வார்.
இந்தியாவின் துருவ் கபிலா- தனிஷா கிராஸ்டோ ஜோடி 21-11, 21-16 என அயர்லாந்து ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.