விளையாட்டு
null

சீனா மாஸ்டர்ஸ்: இறுதி போட்டிக்கு முன்னேறியது சாத்விக்- சிராக் ஜோடி

Published On 2025-09-20 20:40 IST   |   Update On 2025-09-20 20:41:00 IST
  • மலேசிய ஜோடியை நேர்செட் கேமில் வீழ்த்தியது.
  • மலேசிய ஜோடி 11-5 என சாத்விக்-சிராக் ஜோடிக்கு எதிராக வலுவான ரெக்கார்டு வைத்துள்ளது.

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி மலேசியாவின் ஆரோன் சியா- ஷோ வூய் யிக் ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 21-17, 21-14 என நேர்செட் கேமில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

மலேசிய ஜோடி முன்னாள் உலக சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றுள்ளது. இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளது. இந்திய ஜோடிக்கு எதிராக 15 போட்டிகளில் 11 முறை வெற்றி பெற்றுள்ளது. எனினும் இன்றைய போட்டியில் இந்திய ஜோடியிடம் தோல்வியடைந்தது.

நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் கொரிய ஜோடியை எதிர்கொள்கிறது. இதற்கு முன்னதாக இந்திய ஜோடி ஹாங் காங் ஓபனில் 2ஆவது இடம் பிடிததது.

Tags:    

Similar News