விளையாட்டு

புரோ கபடி லீக்: பெங்காலை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவுசெய்தது புனே அணி

Published On 2025-09-03 21:25 IST   |   Update On 2025-09-03 21:25:00 IST
  • 12-வது புரோ கபடி லீக் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.
  • இதில் இன்று நடந்த ஒரு ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி வெற்றி பெற்றது.

விசாகப்பட்டினம்:

12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஒரு போட்டியில் புனேரி பால்டன் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.

ஆரம்பம் முதலே புனே அணி ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில் 45-36 என்ற புள்ளிக் கணக்கில் புனே அணி அபார வெற்றி பெற்றது.

இது புனே அணி பெறும் ஹாட்ரிக் வெற்றி ஆகும். ஏற்கனவே பெங்களூரு, குஜராத் அணிகளையும் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News