விளையாட்டு

புரோ கபடி லீக்: மண்ணைக் கவ்விய பெங்களூரு புல்ஸ்.. தமிழ் தலைவாஸ் த்ரில் வெற்றி

Published On 2025-09-17 00:07 IST   |   Update On 2025-09-17 00:07:00 IST
  • முதல் பாதி முடிவில், பெங்களூரு புல்ஸ் அணி 20-14 என்ற கணக்கில் வலுவான முன்னிலையுடன் ஆதிக்கம் செலுத்தியது.
  • அர்ஜுன் தேஷ்வால்லின் 'சூப்பர் 10' தமிழ் தலைவாஸ்க்கு கை கொடுத்தது.

12 அணிகள் பங்கேற்றுள்ள 12வது சீசன் புரோ கபடி லீக் தொடர் போட்டிகள் ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது.

நேற்று இரவு 9 மணிக்கு தொடங்கிய போட்டியில் தமிழ் தலைவாஸ்-பெங்களூரு புல்ஸ் மோதின.

தமிழ் தலைவாஸ் அணி 35-29 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு புல்ஸை வீழ்த்தியது. ஆட்டத்தின் முதல் பாதி முடிவில், பெங்களூரு புல்ஸ் அணி 20-14 என்ற கணக்கில் வலுவான முன்னிலையுடன் ஆதிக்கம் செலுத்தியது.

இரண்டாம் பாதி தொடங்கியதும், தமிழ் தலைவாஸ் அணி மீண்டு வந்து இறுதியில் வெற்றியை சுவைத்தது.

இறுதியில் அர்ஜுன் தேஷ்வால்லின் 'சூப்பர் 10' தமிழ் தலைவாஸ்க்கு கை கொடுத்தது. இதன் மூலம் பெங்களூரு புல்ஸ்சின் தொடர் வெற்றிக்கு தமிழ் தலைவாஸ் புல் ஸ்டாப் வைத்துள்ளது.

முன்னதாக நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கி நடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய பெங்கால் வாரியர்ஸ் அணி 41-37 புள்ளிக்கணக்கில் உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.     

Tags:    

Similar News