விளையாட்டு
8 வருடத்திற்குப்பின் களம் இறங்கிய மீராபாய்: பளு தூக்குதல் போட்டியில் தங்கம் வென்று அசத்தல்..!
- Snatch முறையில் 84 கிலோ தூக்கினார்.
- clean and jerk முறையில் 109 கிலோ தூக்கினார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த்த சாம்பியன்ஷிப்ஸ் போட்டியில் மீரா பாய் மொத்தமாக 193 கிலோ பளு தூக்கி தங்கம் வென்றார். ஸ்னட்ச் முறையில் 84 கிலோவும், க்ளீன் மற்றும் ஜெர்க் முறையில் 109 கிலோவும் தூக்கி காமன்வெல்த் சாம்பியன்ஷிப்ஸ் சாதனையும் படைத்தார்.
இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றவர் ஆவார். மலேசிய வீராங்கனை (161 கிலோ) வெள்ளி்ப் பதக்கமும், வேல்ஸ் வீராங்கனை (150 கிலோ) வெண்கல பதக்கமும் வென்றனர். 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்த போட்டியிலும் பங்கேற்காமல் இருநது, 48 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டு அசத்தியுள்ளார்.
இவர் உலக சாம்பியன்ஷிப் டைட்டில் மற்றும் இரண்டு காமன்வெல்த் போட்டிகளில் பதக்கமும் வென்றுள்ளார்.