விளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய மகளிர் ஹாக்கி அணி

Published On 2025-04-10 15:18 IST   |   Update On 2025-04-10 15:18:00 IST
  • இந்திய மகளிர் ஹாக்கி அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா செல்கிறது.
  • இந்திய அணி முதல் இரண்டு ஆட்டங்களில் ஆஸ்திரேலியா ஏ அணியுடன் மோதுகிறது.

இந்திய மகளிர் ஹாக்கி அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடர் ஏப்ரல் 26-ந் தேதி தொடங்கி மே 4-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த தொடரில் இந்திய அணி முதல் இரண்டு ஆட்டங்களில் ஆஸ்திரேலியா ஏ அணியுடன் மோதுகிறது. அதனை தொடர்ந்து நடக்கும் 3 ஆட்டங்களில் ஆஸ்திரேலிய சீனியர் அணியுடன் மோதுகிறது.

ஆஸ்திரேலியா ஏ அணியுடனான போட்டி ஏப்ரல் 26-ந் தேதி மற்றும் 27-ந் தேதி நடக்கிறது. ஆஸ்திரேலிய சீனியர் அணியுடனான போட்டி மே 1, 3, 4 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

அனைத்து போட்டிகளும் பெர்த் ஹாக்கி மைதானத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடதக்கது.

Tags:    

Similar News