ஐ.பி.எல்.(IPL)

IPL 2025: MI எதிராக ஒரு மாற்றத்துடன் LSG அணியின் லெவனை தேர்வு செய்த இர்பான் பதான்

Published On 2025-04-04 16:35 IST   |   Update On 2025-04-04 16:35:00 IST
  • லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கானை லெவனில் இருந்து நீக்கியுள்ளார்.
  • மும்பை - லக்னோ அணிகள் இன்று மோதுகிறது.

ஐபிஎல் தொடரின் 18-வது சீசனில் இன்று நடைபெறும் 16-வது லீக் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இரு அணிகளும் விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு வெற்றியையும், இரண்டு தோல்வியையும் பதிவுசெய்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் கணித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் குறித்து விரிவான முன்னோட்டத்தை வழங்கினார். இதற்கிடையில், அவர் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் லெவனையும் தேர்ந்தெடுத்தார்.

இதில் அவர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கானை லெவனில் இருந்து நீக்கியுள்ளார். அதேசமயம் காயம் காரணமாக முதல் சில போட்டிகளாக விளையாடாமல் இருந்த ஆகாஷ் தீப் தற்சமயம் முழு உடற்தகுதியை எட்டியுள்ளதன் காரணமாக அவருக்கு லெவனில் வாய்ப்பு கிடைக்கும்.

என்று பதான் கூறினார்.

கடந்த சீசன் வரை ஆகாஷ் தீப் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இர்பான் பதான் தேர்வு செய்த எல்எஸ்ஜி லெவன்:

ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த் (கேப்டன்), டேவிட் மில்லர், ஆயுஷ் பதோனி, அப்துல் சமத், ஷர்துல் தாக்கூர், திக்வேஷ் ரதி, ரவி பிஷ்னோய், ஆகாஷ் தீப். இம்பேக்ட் வீரர் - பிரின்ஸ் யாதவ்.

Tags:    

Similar News